எல்நாஸ் நரோசி! ஜெயம் ரவிக்காக ஈரானில் இருந்து இறக்குமதியாகும் இளம் நடிகை!

எல்நாஸ் நரோசி , ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படமான ஜனகணமன திரைப்படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார்.


ஈரானை சேர்ந்த நடிகை எல்நாஸ் நரோசி பல டிவி ஷோகளிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் . இவர் ஒரு சிறந்த மாடலும் ஆவார். இவர் தற்போது ஜெயம் ரவி நடிக்கும் ஜனகணமன என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இந்த ஜனகனமன திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை டாப்ஸியும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த ஜனகணமன திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் . இந்த திரைப்படத்தில் வரும் ஆக்ஷன் சீன் களுக்காக எல்நாஸ் நரோசி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அடுத்து எல்நாஸ் நரோசிக்கு தென்னிந்திய திரை உலகில் நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஜெயம்ரவியின் ஜனகணமன திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜான் என்னுமிடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதேசமயம் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் வெளியான காமெடி திரைப்படமான கோமாளி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது . இதுவரை இந்த திரைப்படம் 35 கோடி வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் இந்த கோமாளி திரைப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாகவும் படக்குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியாக உள்ளது.