பிரபல நடிகை தேவயானி வீட்டில் நிகழ்ந்த சோகம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தாயார் லட்சுமி ஜெயதேவ் இன்று காலை காலமானார்.


தமிழ்சினிமாவில் எந்தவித கவர்ச்சியும் இல்லாமல் , தனது திறமையான நடிப்பின் மூலம் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை தேவயானி . நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்த காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை தேவயானி அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார் .

நீண்டகாலம் சினிமா துறையில் முன்னணி நடிகையாக விளங்கிய அவர் பிறகு சின்னத்திரையில் தனது நடிப்பை தொடங்கினார் . தேவயானியின் சகோதரரான நடிகர் நகுல் காதலில் விழுந்தேன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நகுல் கதாநாயகனாக நடித்திருக்கிறார் .

 கடந்த சில காலங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நடிகை தேவயானியின் தாயார் லக்ஷ்மி ஜெயதேவ் இன்று காலை உயிரிழந்தார் . இவரின் மறைவு தேவயானி மற்றும் நகுலின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.