டீச்சர் வேலை போர்..! 6 வருடத்திற்கு பின் மீண்டும் சீரியலுக்கு வந்த தேவயானி! காரணம் என்ன தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராசாத்தி சீரியலில், நடிகை தேவயானி புதிதாக இணைந்துள்ளார்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரை பக்கம் வராத நடிகை தேவயானி சன் டிவியில் ராசாத்தி சீரியல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான சௌந்தரவல்லி கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி வலம் வருகிறார்

தேவயானி பல மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார் மற்றும் அவரது அசராத நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடிகை தேவயானி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை தேவயானியை போல் காமெடி நடிகரான செந்தில் ராசாத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் கால் பதித்து உள்ளார். கணவர் ராஜகுமாரனுக்கும் திரையுலகில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை, குழந்தைகளும் வளர்ந்து வருகின்றனர். எனவே வருமான தேவை என்பதால் தேவயானி மீண்டும் நடிக்க வந்துள்ளாராம்.

இதற்காக கடந்த சில வருடங்களாக சர்ச் பார்க் கான்வென்டில் பார்த்து வந்த டீச்சர் வேலையையும் தேவயானி விட்டுவிட்டாராம்.