15 வயதில் 500 டாலருக்கு பலாத்காரம்! பெற்ற தாயால் பிரபல நடிகை அனுபவித்த சித்ரவதைகள்! பரபரப்பு புத்தகம்!

ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை டெமி மூர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி மனம் திறந்துள்ளார்.


ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை டெமி மூர். இவர் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மிகவும் கோரமான தருணங்களை தன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். 56 வயதாகும் நடிகை டெமி மூர் " Inside out" எனும் புத்தகத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தின் மூலம் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றியும் விவரித்துள்ளார்.

அந்தப் புத்தகத்தில் பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை பற்றி விவரித்துள்ளார். 15 வயதாக இருக்கும் பொழுது தன்னை ஒருவர் பலாத்காரம் செய்ததாகவும் அதனால் பெரிதும் வேதனைப்பட்டதாகவும் அதில் எழுதியுள்ளார். அதாவது டெமி மூர் தனக்கு 15 வயதிருக்கும் பொழுது வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது தன் வீட்டின் வாசலில் ஒரு வயதான ஒருவர் கையில் வீட்டினுடைய சாவியை வைத்துக்கொண்டு டெமி மூர் காக காத்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

அந்த வயதானவரை பார்த்த டெமி மூர் , யார் நீங்கள்? எதற்காக என் வீட்டு வாசலில் அமர்ந்து இருக்கிறீர்கள் ? என்று கேட்டிருக்கிறார் அதற்கு அந்த பெரியவர் உன்னை உனது தாயார் என்னிடம் 500 டாலருக்கு விற்பனை செய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இதனைக்கேட்ட 15 வயது சிறுமியான டெமி மூர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்குப்பின் அந்த நபரால் 

டெமி மூர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். சம்பவத்தையடுத்து உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் அழுத்தத்துக்கு உள்ளானதாகவும் கூறியிருக்கிறார். நடிகை டெமி மூர் நடிக்க வருவதற்கு முன்பாக மாடலாக வலம் வந்தவர் . இவர் நடிக்க வந்த பின்பு சினிமா திரை உலகில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக மாறினார். இவர் முதலாவதாக பிரடி மூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

மீண்டும் இரண்டாவதாக பிரபல நடிகரான புரூஸ் வில்லியம்சை திருமணம் செய்து கொண்டார். எவருடனும் வாழ்க்கை பயணம் சரியாக அமையாத காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனையடுத்து நடிகை டெமி மூர் தன்னைவிட பதினைந்து வயது குறைவாக இருந்த நடிகர் ஆஸ்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப்பின் கர்ப்பமானார். 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது டெமி மூருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு உள்ளது இந்த கருச்சிதைவு ஏற்படுவதற்கு பின்பு இவரது வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. காரணம் இந்த குழந்தையின் பிரிவை தாங்க இயலாமல் தினந்தோறும் தூக்க மாத்திரைகளையும் மதுவுக்கு அடிமையாக வாழ்ந்து வந்துள்ளார் 

இதனையடுத்து தன்னுடைய மூன்றாவது கணவருடனும் மனக்கசப்பு ஏற்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளார் நடிகை டெமி மூர். தற்போது அவர் தன் மகள் ஒருவருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெமி மூர் தற்போது எழுதியிருக்கும் இன்சைட் அவுட் புத்தகத்தை தன்னுடைய மூன்று மகள்களுக்கும் தன்னுடைய அம்மாக்காகவும் சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார். நடிகை டெமி மூரின் தாயார் கடந்த 1998-ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். எழுதியிருக்கும் இந்த புத்தகத்தின் கையொப்பம் இடும் விழா நேற்றைய தினம் கோலாகலமாக நியூயார்க்கில் நடைபெற்றது.