ஊரடங்கு தனிமை..! அதுக்குன்னு நாய் கூடவா? வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்! யார் தெரியுமா?

நடிகர் சிம்பு திரைப்பட நாயகி சார்மி தன்னுடைய செல்லப் பிராணியுடன் இணைந்து படுத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகர் நடிகை சார்மி ஆவார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுடன் இணைந்து காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்தது பிரபலமான நடிகையாக மாறினார். பின்னர் ஆஹா அப்படித்தான், லாடம் போன்ற தமிழ் எதுவுமே எனக்கு தண்ணி போட்டு வரியா திரைப்படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை தெலுங்கு சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர் பல பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதிலும் பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இவரும் காதலித்து வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகின. இதன் பின்னர் நடிகையாக வலம்வந்த சார்மி தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். இவரது தயாரிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளிவந்த "ஐ ஸ்மார்ட் சங்கர்" என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்து வரும் அவர் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ள புதிய திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு நிலவிவரும் சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சார்மி வெளியிட்ட கிண்டலான பதிவு சமூக வலைத்தளத்தில் பரவி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சார்மியும் இதுகுறித்து தான் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருந்தார். நடிகை சார்மி பொதுவாகவே சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபராவார். 

இந்நிலையில் நடிகை சார்மி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் தன்னுடைய செல்லப் பிராணியான நாய் உடன் ஒன்றாக இணைந்து படுத்துக்கொண்டு புகைப்படத்தை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கண்டபடி தங்களுடைய கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு சிலர் "ஊரடங்கு தனிமை..அதுக்குன்னு நாய் கூடவா?", என்றும் நாய் உங்களை விட பெரியதாக இருக்கிறது எனவும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 

தற்போது நடிகை சார்மியின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.