கொரோனா ஊரடங்கின் 5வது நாள்..! பிரபல நடிகையின் குடுமியை பிடித்து சண்டைக்கு வந்த தம்பி! யார் தெரியுமா?

கொரோனா ஊரடங்கின் 5வது நாளில், பிரபல நடிகையின் குடுமியை அவரது தம்பி பிடித்து சண்டை போடும் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.


2017 ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, கேப்மாரி , நாடோடிகள் 2 என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

இவர் சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகை அதுல்யா தன்னுடைய வீட்டில் தன்னுடைய செல்ல தம்பி மற்றும் பெற்றோருடன் உற்சாகமாக தன் நாட்களை கழித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை அதுல்யா தன்னுடைய தம்பியுடன் இணைந்து சண்டையிட்டுக் கொள்ளும் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ பதிவில் நடிகை திவ்யாவை அவரது தம்பி முடியை பிடித்து சண்டையிடுகிறார். இந்த வீடியோ பதிவை நடிகை அதுல்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் அந்த வீடியோ பதிவில் 5வது நாளே நானும் என் தம்பியும் சண்டை போட ஆரம்பித்து விட்டோம் என பதிவிட்டுள்ளார். தற்போது நடிகை பதிவிட்டுள்ள இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.