வாவ் க்யூட்..! காண்போரை கொள்ளை கொள்ளச் செய்யும் பிரபல நடிகையின் பெண் குழந்தை! யார் மகள் தெரியுமா?

நடிகை அசின் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகையாக இருந்தவர். இவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. இவர் கேரளாவை சேர்ந்தவர்.

தமிழில் உள்ளம் கேட்குமே, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி போக்கிரி, காவலன் என பல ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர். இவருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது . அந்த குழந்தைக்கு ஆரின் என்றும் பெயரிட்டுள்ளனர்.

மேலும் 33 வயதாகும் நடிகை அசின் ஓணம் விழாவை கோலாகலமாக தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடினார் . கடந்த ஆண்டு தன் குழந்தையுடனும் தன்னுடைய கணவருடனும் கொண்டாடிய புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அந்த சுகமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தப் பதிவை பார்த்து நடிகை அசினின் ரசிகர்களும் "வாவ் செம க்யூட்டாக இருக்கிறது இந்த குழந்தை" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.