பெண்களின் பின்னழகை ஷேப் ஆக்குவது எப்படி? இந்த நடிகை வெளியிட்ட வீடியோவை பாருங்க..!

பெண்களின் பின்னழகை ஷேப்பாக்குவது எப்படி என்று நடிகை ஆஷ்னா சவேரி புதிதாக வீடியோ பதிவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆஷ்னா சவேரி. இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் முதன் முறையாக நடிகர் சந்தானம் கதாநாயகனாக அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து நடிகை ஆஷ்னா சவேரி நடிகர் சந்தானத்துடன் இணைந்து இனிமே இப்படிதான் என்ற திரைப்படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்தார். பின்னர் அந்த நடிகையின் நடிப்பில் நாகேஷ் திரையரங்கம் என்ற திரைப்படமும் வெளியானது. துரதிர்ஷ்டவசமாக இந்த நடிகையின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு பெரிதாக ஓடவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் தொலைக்காட்சியில் பல திரைப்படங்கள் தூசி தட்டப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகை ஆஷ்னா மற்றும் சந்தானம் ஆகியோர் ஜோடியாக இணைந்து நடித்த திரைப்படங்களும் இடம்பெற்றது. இதன் மூலம் நடிகை ஆஷ்னாவும் சந்தானமும் இணைந்து நடித்த திரைப்படங்களுக்கு சில ரசிகர்கள் உருவாகியுள்ளனர். ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நடிகை ஆஷ்னா, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அதனை சமூக வலைத்தளத்தில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பின்னழகை ஷேப்பாக மாற்றுவதற்கு தேவையான டிப்ஸ்கள் அடங்கிய வீடியோ பதிவை நடிகை ஆஷ்னா தற்போது வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகிறார்.நடிகை வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். இப்போது இந்த வீடியோ பதிவு தீயாக பரவி வருகிறது.