7 மாச கர்ப்பம்! ஆனாலும் உழைக்கிறேன்! என்னோட நிலைமை என் வயித்துல இருக்குற குழந்தைக்கு தெரியும்! அறந்தாங்கி நிஷா உருக்கம்! ஏன் தெரியுமா?

ஆண்கள் மட்டுமே சிறந்தோங்கி வந்த காமெடி துறையில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் அறந்தாங்கி நிஷா.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக முதன் முதலில் அறிமுகமானார். நிஷாவின் அசாத்தியமான காமெடிகள் பல தரப்பினரையும் கவர்ந்தது. காமெடி மட்டுமே வலம் வந்துகொண்டிருந்த அறந்தாங்கி நிஷா தற்போது திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய வயிறு குலுங்க வைக்கும் காமெடியை பயன்படுத்தி மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனக்கென்று உருவாக்கியுள்ளார் நடிகை அறந்தாங்கி நிஷா. இவரது கணவர் பெயர் ரியாஸ். இவர்கள் இருவருக்கும் நேற்றையதினம் திருமணநாள் என்பதால் சமூகவலைதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

பலரும் இவர்களுக்கு வாழ்த்து செய்தி கூறி வந்த நிலையில் ஒரு சில ரசிகர்கள் நிஷாவை திட்டியும் தீர்த்துள்ளார். இதற்கு காரணம் விஷால் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் , துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருக்கிறார். இதனை அறிந்த நிஷா ரசிகர்கள் இந்த மாதிரியான நேரத்தில் நீங்கள் இப்படி பயணம் செய்யலாமா என்று சமூக வலைத்தளத்தில் கண்டித்துள்ளனர்.

ரசிகர்களின் கண்டனத்தை பற்றி நிஷாவிடம் பேசுகையில் , என்னுடைய ரசிகர்கள் என் மீது கொண்டுள்ள அளப்பரிய அக்கறை கொண்டுள்ளதால் இவ்வாறாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்பது எனக்கு நன்றாக தெரியும். இருப்பினும் என்னுடைய சூழ்நிலையின் காரணமாக நான் இவ்வாறாக செய்கிறேன்.

என் கணவர் அரசு ஊழியராக இருப்பினும் , எங்களுடைய பொருளாதார நிலையை சரி செய்வதற்காக நான் பாடுபடுகிறேன். என்னுடைய சூழ்நிலை என் கணவருக்கும் தெரியும் வயிற்றில் இருக்கும் என்னுடைய குழந்தைக்கும் நன்றாக புரியும் என்று கூறியிருக்கிறார் அறந்தாங்கி நிஷா.

அறந்தாங்கி நிஷா மேலும் பேசுகையில் குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்பு வரை தான் கட்டாயம் வேலை பார்ப்பேன் என்று தன் கணவரிடம் கூறி ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் கூறியிருந்தார் . இதற்கு நிஷாவின் கணவர் ரியாஸ் , உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய் என்று கூறியிருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் நடிகை நிஷா அவருக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதுதான் மிகவும் ஆசையாம். எப்படி தன்னுடைய அம்மாவுக்கு தான் மிகப்பெரிய ஆறுதலாக இருந்தார்களோ அதேபோல் தனக்கும் ஒரு பெண்குழந்தை பக்கபலமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் கர்ப்பிணி பெண்ணான அறந்தாங்கி நிஷா.