ஒரு நாளைக்கு ரூ.45 ஆயிரம்! டாப் நடிகைகளை மிரள வைக்கும் 15 வயது நடிகையின் சம்பளம்!

ஹிந்தியில் சின்னத்திரையில் நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் சம்பளம் பெறும் இளம் நடிகை அஷ்னூர் கவுர் குறித்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.


15 வயதான அஷ்னூர் கவுர் ஒரு சீக்கிய-பஞ்சாபி குடும்பத்தை சார்ந்தவர். அவர் கடந்த 2009 இல் குழந்தை நட்சத்திரமாக  தனது வாழ்க்கையைத் ஆரம்பித்தார் . பின்னர் 'சாத் நிபானா சாதியா', 'ஷோபா சோம்நாத் கி', 'மகாபாரத்',  'மகாபாரத்', 'சியாசாத்', 'பிருத்வி வல்லப்' போன்ற பல பிரபலமான இந்தி  சீரியல்களில் நடித்துள்ளார் .

இது மட்டுமில்லாமல் கடந்த 2008 ஆம் ஆண்டு  நடிகை அஷ்னூர், "அஞ்சு " என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார் . இது மட்டுமில்லாமல் பல விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

15 வயதான இந்த நடிகை தற்போது சீரியலில்  ஒருநாள் நடிப்பதற்கு  40லிருந்து 45 ஆயிரம் வரை சம்பளம் பெறுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்முடைய தமிழ்  சீரியல்களில் நடிக்கும்  முன்னணி நடிகைகளே இந்த அளவுக்கு சம்பளம் பெறுவார்களா என்பது கேள்விக்குறியே ..