நம்ம கொளுக் மொழுக் அஞ்சலியா இது? திடீரென குறைந்த உடல் எடை! என்னமா ஆச்சு?

நடிகை அஞ்சலி கடைசியாக ராஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான "லீசா" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.


தற்போது நடிகை அஞ்சலி தன்னுடைய புதிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்த புகைப்படத்தில் மிகவும் ஒல்லியாகவும் அழகாகவும் அல்ட்ரா மாடர்னாகவும் திகழ்கிறார் நடிகை அஞ்சலி. நடிகை அஞ்சலி தற்போது பெரிய திரையில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் சீரிஸில் நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். 

இயக்குனர் விக்னேஷ் சிவன் , வெற்றிமாறன் , கௌதம் மேனன் ,சுதா கோங்குரா ஆகியோர் இணைந்து இயக்க இருக்கும் புதிய வெப்சீரிஸ் இல் நடிகை அஞ்சலி நடிக்க உள்ளார். இதில் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் நடிகை அஞ்சலி பல மொழிகளில் உருவாகிக்கொண்டிருக்கும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாக போகிற "சைலன்ஸ் " என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி , நடிகை ஷாலினி பாண்டே போன்றோரும் நடித்துள்ளனர். மேலும் நடிகை அஞ்சலி சசிகுமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் நாடோடிகள் 2 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.