திருமணமான ஆணுடன் தொடர்பு! செய்த தவறுக்கு தற்போது அனுபவிக்கிறேன்! ஆண்ட்ரியா வெளியிட்ட உண்மை!

ஆண்ட்ரியா பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். 


இவர் ஆயிரத்தில் ஒருவன்,பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற திரைப்படங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் எப்போதுமே சர்ச்சைகளில் சிக்கும் ஒரு நாயகி ஆவார்.  இருப்பினும் தன் நடிப்பின் மூலம்  ரசிகர்களை கவர்ந்து இழுப்பார்.

நடிகை ஆண்ட்ரியா திருமணமான ஆண் ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அதனால் அந்த காலம் தன்னுடைய வாழ்விலே இருண்ட காலமாக திகழ்ந்தது எனவும் உருக்கமாக கூறியுள்ளார்.

தன்னுடைய இந்த சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆண்ட்ரியா சோக  வாழ்வில் ஏற்பட்ட  அனைத்தையும் ஒரு கவிதை நூலாக தொகுத்துள்ளார். 

இந்த  கவிதை நூலுக்கு " முறிந்த  சிறகுகள் " என்று பெயரிட்டுள்ளார். 

தவறான தொடர்பால் ஆண்ட்ரியா மிகவும் மனதளவிலும் உடல் அளவிலும் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளார். தற்போது இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக  முயற்சி செய்துள்ளார் . ஆகவே தான் திரும்பவும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்  உன்னிப்பாக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த செய்தியை அவரே  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.