வியர்க்க விறுவிறுக்க பிக்பாஸ் நடிகை செய்த செயல்..! புகைப்படத்தையும் வெளியிட்டு தாராளம்..! யார், என்ன செய்தார் தெரியுமா?

பிரபல பிக்பாஸ் நடிகை ரேஷ்மா வியர்வை சொட்ட சொட்ட தனது புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடிகை ரேஷ்மா புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை ரேஷ்மா மிகவும் பிரபலமானார். அதன் பிறகு கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகை ரேஷ்மா பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்த நடிகை ரேஷ்மா, தற்போது ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடை அணிந்து வியர்வை சொட்ட சொட்ட கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இவர் தற்போது வெளியிட்டுள்ளார். 


பிக்பாஸ் நடிகை ரேஷ்மாவின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பல்வேறு விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். நடிகை ரேஷ்மாவின் இந்த புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.