ஆடையில்லாமல் நடித்த அமலா பாலுக்கு விஜய் சேதுபதி கொடுத்த செம பரிசு!

விஜய் சேதுபதி தன்னுடைய அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியிருந்த அமலா பாலை படத்தை விட்டு தூக்கியிருப்பது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் அமலாபால் ஆடையின்றி நடித்த காட்சியினை கொண்ட "ஆடை" என்னும் திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதற்கு ரசிகர் பெருமக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோலிவுட் திரையுலகில் பலரும் அமலாபாலின் இந்த தைரியமான முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமலாபால் தன்னுடைய அடுத்த படத்தில் "மக்கள் செல்வன்" விஜய் சேதுபதியின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பானது பழனியில் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு ஊட்டி செல்ல உள்ளனர்.

தற்போது இந்தப் படத்திலிருந்து அமலா பால் விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமலாபாலின் கால்ஷீட் ஒத்துவராததால் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.

ஆனால் நெருங்கிய வட்டாரங்கள் இதற்கு வேறு காரணங்களை கூறுகின்றனர். ஆடை படத்தின் டீசர் வெளியான உடன், பட இயக்குனர் விஜய் சேதுபதியிடம் சென்று, " இந்தப் படத்தில் அமலா பாலுக்கு ஹோம்லி ரோல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மிகவும் வெளிப்படையாக நடித்துள்ள நிலையில், நம் படத்திற்கு எவ்வாறு செட் ஆகும் என்று கேட்டுள்ளார்".

உடனே விஜய் சேதுபதி அமலா பாலை நீக்கிவிட்டு வேறு கதாநாயகியை தேடுமாறு கூறியுள்ளார். அந்த இடத்திற்கு தற்போது மேகா ஆகாஷின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.