குழந்தை பெற்ற பச்சை உடம்புடன் இப்படியா செய்வது? வைரலாகும் ராஜா ராணி செம்பா வீடியோ உள்ளே!

குழந்தை பெற்ற பச்சை உடம்பு உடன் ராஜா ராணி செம்பா பிரபல இந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலில் கணவன் மனைவியாக நடித்தவர் ஆலியா மானசா- சஞ்சீவ் தம்பதியினர். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர். இவர்களது திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினர் தற்போது நிஜ வாழ்க்கையிலும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இந்த தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தை பிறந்ததால் நடிகை ஆலியா மானசா உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து சமீபத்தில் புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் நாளைய தினம் நடிகை ஆலியா மானசா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ளதால் புதிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் ஆச்சரிய படுத்தியுள்ளார். 

நடிகை ஆலியா மானசா வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில், பிரபல இந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் குழந்தை பெற்ற பச்சை உடம்புடன் இப்படியா செய்வது ? என்று அவர் மீது அக்கறை கொண்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது நடிகை ஆலியா வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.