என்னது? அய்லா சைய்யதா? மகளுக்கு இஸ்லாமிய பெயரை சூட்டிய ஆல்யா மானசா! புகைப்படத்துடன் வெளியான தகவல்!

சின்னத்திரை உலகில் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஆல்யா மானசா தன்னுடைய அழகிய மகளுக்கு அய்லா சைய்யத் என இஸ்லாமிய பெயரை சூட்டி இருக்கிறார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் சின்னத்திரையில் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா. இவர் தன்னுடன் நடித்த சஞ்சீவ்-ஐ காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு ஆலியாவின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்பு சிறிது நாட்கள் கழித்து சஞ்சீவ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் ஆல்யாவுக்கும் திருமணம் நடந்து முடிந்ததாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து நடிகை ஆலியா மானசா கர்ப்பமானார். பின்னர் அவரது வளைகாப்பு போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தன. பின்பு அவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை சமீபத்தில் பிறந்தது.

தற்போது நடிகை ஆலியா மானசா தன்னுடைய அழகிய பெண் குழந்தைக்கு அய்லா சைய்யத் என்று பெயரிட்டு உள்ளதாக கூறியிருக்கிறார். அதாவது ஆலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு அய்லா சைய்யத் என்று பெயரிட்டு உள்ளதாக கூறியிருக்கிறார். 

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.