அட பிறந்து சில மாதங்களிலேயே ஆரம்பித்த ஆல்யா மகள்..! எதிர்காலத்தில் அம்மாவையும் மிஞ்சிடுவாங்க போல..! வீடியோ உள்ளே!

பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானசா தன்னுடைய குட்டி மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியலில் கணவன் மனைவியாக நடித்தவர் ஆலியா மானசா- சஞ்சீவ் தம்பதியினர். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இருவரும் காதல் வசப்பட்டனர். இவர்களது திருமணத்திற்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினர் தற்போது நிஜ வாழ்க்கையிலும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் இந்த தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

தற்போது நடிகை ஆலியா, தன்னுடைய குட்டி மகளுடன் அழகான நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது தன் அழகிய மகளை தனது மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சும் விதமாக வீடியோவை எடுத்து அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர். மேலும் இந்த வீடியோ பதிவானது காண்போரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பதிவை பார்த்த நடிகர் ஆலியாவின் ரசிகர்கள், தங்களுடைய மகிழ்ச்சியை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே இப்படியா.. எதிர்காலத்தில் அம்மாவையே மிஞ்சி விடுவாங்க போல... என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். தற்போது நடிகை ஆலியா மானசா வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.