குடிபோதையில் மாமனார் அமிதாப் பச்சனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினாரா ஐஸ்வர்யா ராய்? வைரல் வீடியோவின் பரபர பின்னணி!

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற விருது விழாவின்போது பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யாராய் குடிபோதையில் தன் மாமனார் அமிதாப்பச்சன் இடம் வித்தியாசமாக நடந்து கொண்ட சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற விருது விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மாமனார் அமிதாப்பச்சன் ஆகியோர் பங்கேற்று விருது பெற்றனர். இருவரும் தங்களது விருதுகளைப் பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசும்பொழுது ஐஸ்வர்யாராய் தன்னுடைய மாமனாரான அமிதாப்பச்சனை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் பதித்தார்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக குழந்தைத்தனமான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமிதாபச்சன் , ஆராத்யா போல் நடந்து கொள்வதை முதலில் நிறுத்து என்று கூறுகிறார். அதாவது ஆராத்யா நடிகை ஐஸ்வர்யாராயின் மகளாவார்.

அமிதாப்பச்சன் இப்படி சொன்னதும் அங்கே இருந்த செய்தியாளர்கள் அனைவரும் சிரித்தனர். இதனையடுத்து மாமனாரை கட்டி பிடித்து நீங்கள்தான் மிகச் சிறந்தவர் என்றும் 

 ஐஸ்வர்யா ராய் மிகவும் கூச்ச லிட்டு கூறினார். இது அங்கிருந்த அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதாவது நடிகை ஐஸ்வர்யாராய் குடிபோதையில் இருக்கிறாரா என அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பியது. பின்னர் அவர்கள் இருவரிடமும் விருது பெற்றுக் கொண்ட அனுபவத்தைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அது மட்டும் இல்லாமல் அவரது வீட்டில் இருக்கும் நான்கு சினிமா பிரபலங்களை பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

அமிதாப்பச்சன் உடனடியாக நீங்கள் தவறாகக் கூறுகிறீர்கள் எங்கள் வீட்டில் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்று கூறினார். நீங்கள் என் தந்தையை மறந்துவிட்டீர்கள் (புகழ்பெற்ற கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன்) மற்றும் 6வது சினிமா வழியில் வருபவர் என்று ஆராத்யாவைக் ஒரு பிட்டு கூறினார்.

இந்த வீடியோ பதிவானது வெளியாகி பல வருடங்கள் ஆகிய நிலையில் தற்போது இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சரமாரியாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.