பின்னால் வந்து ஒரு கட்டிப்பிடி..! முன்னால் வந்து ஒரு ரோஜாப்பூ கொத்து! மணிரத்னத்துக்கு புரபோஸ் செய்த 32 வயது நடிகை?

இயக்குனர் மணிரத்னம் என்றாலே பல வித்தியாசங்களை தன்னுடைய திரைப்படத்தில் புகுத்தி புதுவிதமாக ஒரு கருத்தை நிலைநாட்டும் ஒரு அற்புதமான இயக்குனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


பல வித்தியாசங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒரு திரைப்படத்தை இயக்குவதில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்பவர் இயக்குனர் மணிரத்னம். இவருடைய இயக்கத்தில் ஒரு திரைப்படம் ஆவது நடித்து விட வேண்டும் என பல முன்னணி ஹீரோயின்களும் ஹீரோக்களும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் உருவான காற்று வெளியிடை மற்றும் செக்கச்சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இவர் தன்னுடைய அமைதியான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர். இவர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது இயக்குனர் மணிரத்னத்துக்கு ரோஜாப்பூவை அளித்து ப்ரொபோஸ் செய்தது போன்ற சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இது மட்டுமில்லாமல் இயக்குனர் மணிரத்தினம் அவர்களை பின்னால் இருந்தவாறு நடிகை அதிதி கட்டியணைத்த புகைப்படமும் மிகவும் வைரலாக பரவியது. இதனை பார்த்து இவர்களது ரசிகர்கள் பலவிதமாக சமூகவலைத்தளத்தில் கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். மணிரத்னம் அடுத்து எடுக்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அதிதி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாகவே இப்படி நடந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள்.