நியுஸ் ரீடராக மாறிய நாடோடிகள் புகழ் நடிகை! ஏன் தெரியுமா?

நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகை அபிநயா.


நடிகை அபிநயா ஆயிரத்தில் ஒருவன் ,ஈசன் , ஏழாம் அறிவு , வீரம் ,தனி ஒருவன் போன்ற வெற்றித் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . 

இயல்பாகவே வாய் பேச முடியாத நடிகை அபிநயா தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் .

நடிகை அபிநயா தற்போது ஆபரேஷன் அரபைமா என்ற திரைப்படத்தில் செய்திவாசிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

இயக்குனர் பிராஸ் இயக்கத்தில்,  நடிகர் ரகுமான் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது .

நேர்மையான ஒரு கடற்படை அதிகாரியின் வாழ்க்கையின் மையமாகக் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லராக  இந்த திரைப்படம் இருக்கும் எனவும் , சில உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைத்துள்ளேன் எனவும் இயக்குனர் கூறியுள்ளார் . மேலும் அரபைமா என்பது கடலில் இருக்கும் ஒரு வகையான மீன் எனவும் இந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளார் .