தொடக்கூடாத இடத்தில் தொட முயற்சி! ரசிகருக்கு கன்னத்தில் பளார் விட்ட கவர்ச்சி நடிகை!

கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டு தொடக்கூடாத இடத்தில் தொட முயன்ற ரசிகரை கவர்ச்சி நடிகை ஒருவர் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.


சல்மான் கானின் வீர் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஜரீன் கான். இவர் நடித்த ஹேட் ஸ்டோரி எனும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் இந்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜரீன் கான் வலம் வருகிறார். தொடர்ந்து பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடம் ஏற்று நடித்து வரும் ஜரீன் கான் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் குத்தாட்டம் போட்டிருப்பார்.

    மேலும் நடிகர் விக்ரமை வைத்து பூஜை போடப்பட்ட கரிகாலன் படத்திலும் ஜரீன் கான் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க இருந்தார். ஆனால் இந்த படம் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அவுரங்காபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள ஜரீன் கான் சென்றுள்ளார். ஜரீன் கானின் கவர்ச்சி ஆட்டத்தை திரையில் மட்டுமே பார்த்த ரசிகர்கள் அவரை நேரில் பார்க்க திரண்டுள்ளனர்.

    இதனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. கடை திறப்பு விழா முடிந்து ஜரீன் கான் தனது காருக்கு திரும்ப கூட முடியாத வகையில் கூட்டம் அலைமோதியது. போலீசார் பாதுகாப்புடன் ஜரீன் கானை அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் ஜரீன் கானின் முன்னழகை நோக்கி கைகளை கொண்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜரீன் கான் அந்த ரசிகருக்கு கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டுள்ளார்.

   இந்த தகவல் உடனடியாக பொழுதுபோக்கு இணையதளங்களில் பரவின. இது குறித்து ஜரீன் கானை மும்பையில் உள்ள பிரபல ஊடகங்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது அந்த ரசிகரை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டியபடியே நடந்ததை கூறியுள்ளார் ஜரீன் கான். தான் நடந்து வரும் போது அவன் என்னுடைய மார்பகங்களை தொட முயன்றான். அதனால் தான் அவனுக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக ஜரீன் கான் கூறியுள்ளார்.

   கடந்த ஒரு வாரமாகவே நடிகை ஜரீன் கான் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். தனது முன்னாள் மேலாளர் தன்னிடம் பணம் கேட்டு அநாகரீகமாக நடந்து கொண்டதாக கடந்த வாரம் ஜரீன் கான் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து கோவாவுக்கு படப்பிடிப்புக்கு சென்று இருந்த போது நடிகை ஜரீன் கான் சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் உயிரிழந்தார்.

   இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக ஜரீன் கான் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் தான் ரசிகரை கன்னத்தில் அறைந்து மீண்டும் செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளார் ஜரீன் கான்.