பிரபல கிரிக்கெட் வீரருடன் நெருக்கம்..! அவருக்கே விரைவில் மனைவியாகப்போகும் சரத்குமார் மகள் வரலட்சுமி..! யார் தெரியுமா?

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் கூடிய விரைவில் கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் போடா போடி திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், வில்லி கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.

அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபகாலமாகவே சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னையும் ஒருசிலர் படுக்கைக்கு அழைத்ததாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தகவலை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை உண்டாக்கினார்.

நடிகை வரலட்சுமியும் நடிகர் விஷாலும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருவதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டது. ஆனால் இதனை இருவருமே ஒப்புக் கொள்ளவில்லை. இறுதியில் இருவருக்குமிடையில் பிரேக்கப் ஆனவுடன் நடிகர் விஷால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயமும் செய்து கொண்டு அந்த திருமணமும் தற்போது நின்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நடிகை வரலட்சுமி சரத்குமார், தற்போது குடும்ப வாழ்க்கையில் இணை போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தவுடன், நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பிரபல கிரிக்கெட் வீரர்களான தோனி மற்றும் கோலி ஆகியோரின் நெருங்கிய நண்பரான ஒருவரை தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வரலட்சுமியும் அந்த கிரிக்கெட்  அணியின் முக்கிய பொறுப்பில் உள்ள அந்த நபரும் காதலித்து வந்ததாகவும் இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டி திருமண ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து வரலட்சுமி இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ராதிகாவின் மகள் ரேயான், அபிமன்யு மிதுன் என்ற கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் அவர்களது குடும்பத்தில் மாப்பிள்ளையாக இணைய உள்ளார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்த தகவலானது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.