த்ரிஷா வீசிய காதல் வலையில் சிக்கிய வயதில் இளைய நடிகர்! தீயாய் பரவும் கிசுகிசு!

தனது திருமணம் குறித்து நடிகை திரிஷா மனம் திறந்துள்ளார்.


தமிழ் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் நடிகைகளில் நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் த்ரிஷா. இடையில் சில சில படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தாலும் 96 என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தன்னை ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்து ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் உடன் பேட்ட  திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பரமபதம் விளையாட்டு, ராங்கி மற்றும் பெயரிடப்படாத திரைப்படம் ஆகியவற்றில் திரிஷா நடித்து வருகிறார். அண்மையில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய திரிஷா அவர்களது கேள்விக்கு ருசிகரமாக பதில் அளித்து அசத்தினார். வேடிக்கையான பல கேள்விகளுக்கும் மிகவும் ருசிகரமாக தனது பாணியிலேயே அவர் பதிலளித்தார்

அப்போது ஒரு ரசிகர் திரிஷாவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அவருக்கு பதில் அளித்த த்ரிஷா, திருமணம் அவசியம் இல்லை ஆனால் தேவை என்கிற நிலை வரும்போது செய்து கொள்வதாக கூறினார். இதன் மூலம் அவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தற்போது வளர்ந்து வரும் ஹீரோ ஒருவர் தான் த்ரிஷாவின் காதல் வலையில் சிக்கியுள்ளதாகவும் அவருக்கு த்ரிஷாவை விட வயது குறைவு என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயம் செய்து கொண்ட த்ரிஷா கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.