கொரோன தனிமை..! திரிஷாவுக்கு கம்பெனி கொடுக்க வந்த 2 ஜபர்தஸ்த் ஹீரோக்கள்..! எங்கு, எப்படி தெரியுமா?

ஊரடங்கு உத்தரவால் தனிமையில் இருந்து வரும் நடிகை திரிஷாவிற்கு பிரபல தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜுன் மற்றும் ராணா டகுபதி அவர்கள் இருவரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடி அவரை மகிழ்வித்து உள்ளனர்.


உலகையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மருந்து ஏதும் இல்லாததால் மத்திய அரசாங்கம் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அதன்மூலமாக சமூக விதிகளை பின்பற்றி நம்மால் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் மத்திய அரசாங்கம் கூறியுள்ளது. இதனையடுத்து ஷாப்பிங் மால்கள், திரையரங்கங்கள் உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டுள்ளன.

அதேபோல் சினிமா படப்பிடிப்புகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகள் தங்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட்டு அதனை சோஷியல் மீடியாவில் தங்களுடைய ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை திரிஷா பதிவிட்டுள்ள புதிய பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது நடிகை திரிஷா ஊரடங்கு உத்தரவு நாட்களில் தன்னுடைய தனிமையைப் போக்கிக் கொள்ள தெலுங்கு சினிமாவில் ஜபர்தஸ்த் நடிகர்களாக வலம் வரும் ராணா டகுபதி மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் வீடியோ கான்பரன்சில் இணைந்து உரையாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இவர்கள் தான் என்னுடைய தனிமையை தள்ளி கம்பெனி அளித்து வருகின்றனர் என்று கேப்சனாக பதிவிட்டிருக்கிறார். 

நடிகை திரிஷா பதிவிட்டுள்ள இந்த புதிய பதிவானது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.