என் வீட்டு கழிவறையில் எனது புகைப்படம்..! விளம்பரத்திற்காக நடிகை செய்த செயல்!

நடிகை டாப்ஸி விளம்பரத்திற்காக தன் வீட்டு கழிவு அறையில் போட்டோ ஷூட் நடத்தி அந்தப் படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார் நடிகை டாப்ஸி பண்ணு. இவர் தெலுங்கு திரையுலகில் வெளியான சும்மாண்டி நாதம் என்ற திரைப்படத்தின் வாயிலாக சினிமா திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழிலும் ஆடுகளம் , வந்தான் வென்றான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இதுமட்டுமில்லாமல் பாலிவுட் திரை உலகிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை டாப்சி, ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வீட்டிலேயே இருக்கிறார்.

மும்பையில் உள்ள அவரது வீட்டில் சகோதரியுடன் இணைந்து இருக்கும் நடிகை டாப்ஸி தற்போது புதிதாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். மேகசின் ஒன்றுக்காக நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை வெளியிட்டிருக்கிறார். டாப்ஸி வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களில் பெரும்பாலானவை அவரது வீட்டுக் கழிவறையில் எடுக்கப்பட்டதாகும். அதாவது இந்த போட்டோ ஷூட் பிரபல மேகசின் ஒன்றின் அட்டைப்படத்திற்காக எடுக்கப்பட்டதாகும்.

நடிகை டாப்ஸி தன் வீட்டுக் கழிவறையில் உள்ள ஸ்லேப்பில் வெள்ளை நிறத்தில் மேல் டாப்பும் குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு மிகவும் செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் டாப்ஸியின் அழகில் கிறங்கி போய் உள்ளனர். தற்போது நடிகை டாப்சி வெளியிட்டுள்ள இந்த கழிவறை புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவுகிறது.