என் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்றார்..! இளம் நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்! யாரை பற்றி தெரியுமா?

சில மாதங்களுக்கு முன் நடிகர் சுர்வீன் சாவ்லா எழுப்பிய மீடூ புகார் குறித்த பேட்டி தற்போது மீண்டும் இணையதளத்தில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்களால் எழுப்பப்பட்ட மீடூ புகார் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை தைரியமாக மீடூ ஹேஷ்டேக்கில் பதிவிட்டு இருந்தனர். இந்த வரிசையில் சினிமா உலகில் உள்ள பெண்களும், பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக மீடு புகார் அளித்து வந்தனர்.

ரஸாமி தேசாய் உள்ளிட்ட நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை தெரிவித்தனர். இது சினிமா உலகில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடேயே இந்தி பிக்பாஸ் 13 வது சீசனில் பங்கேற்ற நடிகை ரஸாமி தேசாயும் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்திருந்தார்.

இந்தி திரையுலகை சேர்ந்த நடிகை சுர்வீன் சாவ்லா தமிழில் மூன்று பேர் மூன்று காதல், புதிய திருப்பங்கள், ஜெய்ஹிந்த் 2 படங்களில் நடித்துள்ளார். இவரும் தான் எதிர்கொண்ட பாலியல் தொல்லைப் பற்றி கூறும்போது, தென்னிந்திய சினிமாவில் இதுபோன்ற அனுபவங்களை எதிர்கொண்டதா கூறினார். இயக்குனர் ஒருவர் என் உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அனுபவிக்க விரும்புவதாகச் சொன்னார். தேசிய விருது பெற்ற மற்றொரு இயக்குனரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினார்.

பாலிவுட் இயக்குநர் ஒருவர் என் கிளிவேஜையும் என் தொடைகளையும் பார்க்க விரும்புவதாகச் சொன்னதால் அதிர்சி அடைந்து தன்னம்பிக்கை காரணமாக இதில் இருந்து வெளியேறி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் அப்போது அளித்த பேட்டி தற்போது மீண்டும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது