கணவர் திடீர் மரணம்! இளம் வயதில் விதவையான பிரபல நடிகை!

பிரபல குணச்சித்திர நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா உடல்நலக்குறைவால் காலமானார்.


நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா டிவி ஷோக்களை உருவாக்குபவர். சில வருடங்களுக்கு முன் நடிகை சுரேகா வாணி சுரேஷ் டேஜாவை ஒரு டிவி ஷோவ் நிகழ்ச்சியில் சந்தித்தார்.சுரேஷ் தேஜா அவர்கள் சுரேகா ராணிக்கு மா டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்பு வாங்கி தந்தார். 

இதனால் உண்டான நெருக்கும் இவர்கள் இருவரையும் நண்பர்களாக மாற்றியது. நாட்கள் செல்ல செல்ல நட்பு காதலாக மாறியது. பின்னர் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ முடிவு செய்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறு வயதில் சுரேஷ் தேஜா காலமானதால் நடிகை சுரேகா வாணியின் குடும்பமும், திரை உலகமும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது. மாரடைப்பு காரணமாக தேஜா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.