பிரபல நடிகை சுனைனா தற்போது நடித்துவரும் புதிய படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காட்டுப்பகுதியில் கட்டிப் புரண்ட சுனைனா..! யாருடன் தெரியுமா? வெளியானது புகைப்படம்!

பிரபல நடிகை சுனைனா தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுனைனா மாசிலாமணி, வம்சம், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
நடிகை சுனைனா தற்போது டிரிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படத்தில் சுனைனாவை அமெரிக்க ரக பிட்புல் நாய் ஒன்று துரத்தி வந்து கடிப்பது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த வீடியோவை நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நாயின் பெயர் ராம்போ எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாயிடம் கடிவாங்குவது போன்ற காட்சிகளில் டூப் ஏதும் போடாமல் நடிகை சுனைனாவே துணிச்சலாக நடித்து இருக்கிறார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் கண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். சுனைனாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.