மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய நேரத்தில், அவரது கட்சியினர் அத்தனை பேரும் தொலைக்காட்சி பார்த்து கைதட்டியதோடு நிறுத்திக் கொண்டனர் ஆனால், நடிகை சுகன்யா மட்டும்தான் வித்தியாசமான வகையில் ஆதரவு கொடுத்தார்.
ராமர்கோவில் அடிக்கல் விழாவுக்கு நடிகை சுகன்யா மட்டும் வித்தியாசமான வகையில் ஆதரவு..! பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா?
ஆம், அவர் நெற்றியில் ராமர் படத்தை வரைந்து, ராமர் கோவில் கட்டுவதற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சுகன்யா பற்றிய முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார் பிரபல பத்திரிகையாளரான இதயக்கனி விஜயன்.
பிரபல நடிகையான சுகன்யா தமிழ் , மலையாளம், கன்னடம், தெலுங்கு என 15 ஆண்டுகளாக வலம் வருபவர். 1991ஆம் ஆண்டு ’புது நெல்லு புது நாத்து’ திரைப்படதின் வழியாக தமிழ் சினிமாவுக்கு காலடியெடுத்து வைத்தவர். சின்ன கவுண்டர்,செந்தமிழ்பாட்டு திரைப்படங்களே சுகன்யாவிற்க்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. நடிப்புக்காக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றிருக்கிறார் சுகன்யா.
ஆனால், அவர் ராமர் படத்தை நெற்றியில் பதிந்து பதிவிட்டிருப்பதைப் பார்த்து பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டதாக பலரும் சொல்கிறார்கள். உண்மை என்ன என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.