மேடம் அந்த ஒரே ஒரு வீடியோ..! கூச்சப்படாமல் கேட்ட ரசிகர்..! வெட்கப்படாமல் வெளியிட்ட ஸ்ருதி..!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் கேட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு, 3 போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். நடிப்பது மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் வலம் வரும் இவர் நடிக்க ஆரம்பித்த ஒரு சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் லாபம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரைப்பட சூட்டிங் போன்ற ஏதும் நடைபெறாததால் நடிகைகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தங்களது நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சுருதிஹாசன் ரசிகர்கள் கேட்ட வீடியோவை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது இன்ஸ்டகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசனிடம் Hula Hoop exercise (உலா ஊஃப் உடற்பயிற்சி) எப்படி கற்றுக்கொள்வது மேலும் அந்த உடற்பயிற்சி எவ்வாறு செய்வது என்பது குறித்த வீடியோவை வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்டு வந்தனர். நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.