ரஜினி குறித்து நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் லாரன்ஸ்!

நடிகர் ரஜினி குறித்து நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள தகவல் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடிகை ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் ஏதாவது எழுதினாலே நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கும். ஏனென்றால் தயவு தாட்சன்யம் பார்க்காமல் எந்த நடிகரையும் பற்றியும், எந்த இயக்குனரை பற்றியும் தனக்கு தெரிந்த விஷயத்தை வெளிப்படையாக கூறி வருபவர் ஸ்ரீரெட்டி. இதனால் ஸ்ரீரெட்டி ஏதாவது இன்று போஸ்ட் போட்டுள்ளாரா என்று அவரது பேஸ்புக் பக்கத்தை திரையுலக பிரபலங்கள் தவறாமல் பார்த்துவிடுவர்.

  இதுநாள் வரை ஸ்ரீரெட்டி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் குறித்து மட்டுமே எழுதி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். ஒரு சில நடிகர்களை மட்டுமே ஸ்ரீரெட்டி நல்லவர் என்று கூறி வந்தார். அவரது பேஸ்புக் பக்கத்தில் நல்லவரை பற்றி எழுதுவது அரிதான ஒன்று. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஸ்ரீரெட்டிய கூறியுள்ள சில விஷயங்கள் பரபரப்பு ரகம்.

   அதாவது ரஜினியின் பேட்ட திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரஜினியின் பேட்ட படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரஜினிக்கு தமிழகத்தில் இருக்கும் ஓபனிங்கில் கால்வாசி ஓபனிங் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உண்டு. இதனால் பேட்ட படத்தை வாங்கி அங்கு விநியோகம் செய்ய பலர் போட்டியிட்டனர். அந்த வகையில் பெரிய தொகைக்கும் பேட்ட ஆந்திரா தெலுங்கனாவில் விற்பனையானது.

   ஆனால் என்.டி.ஆர் வாழ்வை மையமாக வைத்து பாலகிருஷ்ணா எடுத்துள்ள தெலுங்க படம் ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் ஆக்கிரமித்துவிட்டது. ரஜினியின் பேட்ட படத்திற்கு இரண்டு தியேட்டர்கள் மட்டுமே நல்ல தியேட்டர்கள் கிடைத்துள்ளது. இதனால் படத்தின் விநியோக உரிமையை பெற்ற அசோக் அதிர்ச்சியில் உள்ளனர். எவ்வளவோ முயன்றும் பேட்ட படத்திற்கு அங்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை.

   இந்த நிலைக்கு பயந்து தான் விஸ்வாசம் படம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வெளியாவது தள்ளிப்போயுள்ளது. ஆனால் ரஜினியின் பேட்ட மோதிப்பார்த்துவிடலாம் என்று களம் இறங்கி தற்போது செய்வதறியாது திகைத்து நிற்கிறது. இது குறித்து ஸ்ரீரெட்டி பேஸ்புக்கில் எழுதியுள்ளதாவது, ரஜினிகாந்த் போன்ற ஜாம்பவான் படங்களுக்கு ஆந்திராவில் இரண்டே இரண்டு தியேட்டர்கள் தான் ஒதுக்கீடு என்று திரையுலகம் யார் கையில் உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

   மேலும் பேட்ட படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவிடாமல் தடுத்த தில் ராஜூ, அல்லு அரவிந்த், சுரேஷ் பாபு, சுனில் நரங்க ஆகியோர் நல்லாவே இருக்கமாட்டார்கள் என்று ஸ்ரீரெட்டி சாபம் விட்டுள்ளார். மேலும் விரைவில் அந்த நான்கு பேரும் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினியின் படத்திற்கு ஆதரவாக ஸ்ரீரெட்டி இப்படி கொந்தளித்துள்ளதற்கு காரணம் லாரன்சாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் லாரன்சுடன் தற்போது சமாதானமாக சென்றுள்ள ஸ்ரீரெட்டி, அவர் கூறியதை வைத்து இந்த கருத்தை தெரிவித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.