கொரானாவை விட நீங்கள் தான் என்னை பாதிக்கச் செய்கிறீர்கள்! சர்ச்சை நடிகையின் திடீர் ஆசை!

சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி இயக்குனர் ராம் கோபால் வர்மாவுஙக்காக ஏக்கத்துடன் கொரானாவை விட நீங்கள் தான் என்னை பாதிக்கச் செய்கிறீர்கள்...என அதிரடியாக பதிவு ஒன்றை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.


நடிகை ஸ்ரீ ரெட்டி என்றாலே சர்ச்சைக்கு ஒருபோதும் பஞ்சமே கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஸ்ரீரெட்டி யாரை அடுத்து சமூகவலைத்தள பக்கத்தில் வம்பிழுக்க போகிறாரோ எனப் பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது இயக்குனர் ராம் கோபால் வர்மாவை சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறார்.

அதாவது நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் கொரானாவை விட நீங்கள் தான் என்னை பாதிக்கச் செய்கிறீர்கள்.நான் இன்னும் உங்களை காதலித்து தான் வருகிறேன். நாம் இருவரும் இணைந்து தனிப்பட்ட முறையில் ஜிஎஸ்டி செய்யலாமென சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். 

ஜிஎஸ்டி என்பது வரி கிடையாது இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய காட், செக்ஸ் அண்ட் ட்ரூத் என்ற செக்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். திரைப்படமானது கடந்த 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வெளியிடப்பட்டது. 

இந்த திரைப்படத்தில் அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஒருவர் நிர்வாணமாக நடிக்க காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆகையால் போலீசார் ராம் கோபால் வர்மாவை இத்திரைப்படத்திற்காக கைது செய்தனர். இந்த திரைப்படத்தை குறிப்பிட்டு தான் நடிகை ஸ்ரீ ரெட்டி இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டு இருக்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இதற்கு முன்பாக நடிகை ஸ்ரீ ரெட்டி, இயக்குனர் ராம் கோபால் வர்மா என்னுடைய கால்களை தடவி இனி தேவதை என்று கூறினார். ஆனால் தற்போது என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணின் கால்களை தடவை துவங்கி இருக்கிறார் என ஆபாசமாக பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சர்ச்சை அடங்கியுள்ள சில நாட்களிலேயே நடிகை ஸ்ரீரெட்டி புதிதாக மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பும் விதமாக புதிய பதிவை தன்னுடைய பேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி கமென்ட் செய்த வண்ணம் உள்ளனர்.