ஒரு நாள் இரவு முழுவதும் உதயநிதியுடன் விவகாரம்..! ஸ்ரீரெட்டி வெளியிட்ட புது தகவல்!

சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் வெளியாகிய உதயநிதி ஸ்டாலின் பற்றிய தகவல் முற்றிலும் பொய்யானது என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.


தெலுங்கு திரையுலகில் பல சர்ச்சைகளை கிளப்பி வருவதில் முன்னணியில் திகழ்பவர் நடிகை ஸ்ரீரெட்டி ஆவார். தெலுங்கில் ஏராளமான நடிகர், இயக்குனர்களை வம்புக்கு இழுத்திருக்கும் ஸ்ரீரெட்டி, தமிழ் திரையுலகிலும் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் மீது பாலியல் புகார் வீசினார். 

அந்த வகையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது ஸ்ரீரெட்டி குற்றம் சுமத்தியிருப்பதாக சமீபத்தில் ஒரு முகநூல் தகவல் உலா வந்தது. அதில், மூன்று வருடங்களுக்கு முன்னர் கதிர்வேலன் காதலன் படத்தின் சூட்டிங்கிற்காக ஹைதராபாத்திற்கு வந்தது ஞாபகம் இருக்கிறதா? விஷால் ரெட்டி மூலம் நாம் அறிமுகமானோம், எனக்கு வாய்ப்பு தருவதாக சொன்னீர்கள்.

அதன்பிறகு அந்த இரவு முழுவதும் நாம் கிரீன் பார்க் ஹோட்டலில் சந்தித்தோம், அன்று இரவு முழுவதும் என்ன செய்தோம்? நீங்கள் சொன்னபடி எனக்கு வாய்ப்பு தரவில்லை என்றாலும், அன்றைய தினத்தை நான் மறக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார்.

மேலும் அந்தப் பதிவில் நடிகை ஸ்ரீ ரெட்டி விரைவில் நான் இதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும். இதற்கான செய்தியாளர் சந்திப்பை விரைவில் நான் ஏற்பாடு செய்ய உள்ளேன் என்றும் பொறுமையாக காத்திருங்கள் விரைவில் அந்த தேதியை நாள் வெளியிடுவேன் என்று உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு கூறியிருந்தார்.

ஆனால் தற்போது சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் வெளியாகிய உதயநிதி ஸ்டாலின் பற்றிய தகவல் முற்றிலும் பொய்யானது என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை ஸ்ரீரெட்டி நான் உதயநிதி ஸ்டாலினை நேரில் கூட பார்த்ததில்லை. வேறொருவர் என்னுடைய பெயரை பயன்படுத்தி போலியாக அக்கவுண்ட் மூலம் சமூக வலைத்தளத்தில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெயரை களங்கம் செய்வதற்காக இப்படி செய்திருக்கிறார்கள்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விரைவில் அரசியலுக்கு வருவேன் எனவும் மக்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.