பிரபல நடிகை சோனா தனது வாழ்க்கையில் இரண்டு பேரை காதலித்ததாகவும் , இரண்டு பேரிடமும் திருமணம் வரை நெருங்கி கடைசி நிமிடத்தில் ஏமாற்றம் அடைந்ததாகவும் மனம் திறந்துள்ளார்.
2 ஆண்கள்..! 2 பேரிடமும் ஏமாந்தேன்..! இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? அவரே வெளியிட்ட தகவல்..!

தமிழ், தெலுங்கு ,மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனா ஆவார். குசேலன், ஷாஜகான், குரு என் ஆளு போன்ற பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். 40 வயதாகும் நடிகை சோனா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை. சமீபத்தில் நடிகை சோனாவிடம் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், எனது வாழ்க்கையில் 2 முறை காதல் வந்தது. ஒருவரை காதலித்து ஆறு வருடங்கள் உயிருக்கு உயிராக பழகினேன். இன்னொருவருடன் ஏழு வருடங்கள் பழகினேன்.
அந்தக் 2 காதலும் தோல்வியில் தான் முடிவடைந்தது. திருமணம் வரை நெருங்கிய நிலையில் இரண்டு பேரும் என்னை ஏமாற்றி விட்டார்கள். இதனால் எனக்கு திருமண வாழ்வின் மீது மிகப் பெரிய வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. எனக்கு நெருங்கியவர்கள் சீக்கிரம் திருமணம் செய்துகொள் என்று கூறுகிறார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனக்கு இன்னும் இரண்டு முக்கியமான கடமைகள் உள்ளன. என் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அதே போல என்னுடைய ஒன்றுவிட்ட தங்கைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்திருக்கிறேன்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் நான் என் சுயசரிதையை எழுதி முடித்து விட்டேன். அதில் நிறைய ரகசியங்கள் உள்ளன. ஊரடங்கு தற்போது அமலில் இருப்பதால் வெளியே எங்கேயும் செல்ல முடிவதில்லை. என் சுயசரிதையை புத்தகமாக வெளியிடுவதற்கு சரியான பதிப்பாளரை தேடி வருகிறன் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.