சினேகாவுக்கு வாந்தி வாந்தியா வருதாம்! ஒரே மசக்கையாம்! பிரசன்னா ஹேப்பி அண்ணாச்சி!

தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய புன்னகையால் கட்டிப்போட்டவர் நடிகை சினேகா


இவர் தமிழ் திரையுலகில் என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனந்தம் திரைப்படத்தில் வரும்  பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் .  இந்த திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான  விருதையும் தட்டிச் சென்றார் நடிகை சினேகா.

இதனைத்தொடர்ந்து புன்னகை தேசம் உன்னைநினைத்து, பார்த்திபன் கனவு , ஆட்டோகிராஃப் என பல பிரபலமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் புகழை அடைந்தார்.

பின்னர் நடிகை சினேகா  கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான கையோடு திரை உலகத்தை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தன்னுடைய குழந்தையை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை சினேகா  நடிப்பில் உருவான குருஷேத்திர திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இதனையடுத்து நடிகை சினேகாவின் ரசிகர்கள் இவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது இவர் மீண்டும் சினிமாத்துறைக்கு பிரேக் விடப் போகிறார் என செய்திகள் பரவி வருகின்றன.

இதற்கு காரணம் நடிகை சினேகா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன ஆனால் இதனை பற்றிய எந்த அறிவிப்பும் சினேகா-பிரசன்னா தம்பதியினர் இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் இதனை அறிந்த சினேகாவின் ரசிகர்கள் அவருக்கு  வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.