லண்டன் போலீசிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா..! திருமணமான பிறகா இப்படி நடக்கணும்? அதிர்ச்சி காரணம்!

நடிகை ஸ்ரேயா சண்டகாரி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது லண்டன் போலீசிடம் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மாதேஷ் இயக்கிவரும் புதிய திரைப்படமான சண்டக்காரி திரைப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விமல் சாஃப்ட்வேர் இன்ஜினியராகவும் நடிகை ஸ்ரேயா அதே அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணி புரிவதாகவும் கதாபாத்திரங்கள் அமைந்திருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு படு ஜோராக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் ஜெயபாலன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் சண்டக்காரி திரைப்படத்தில் காமெடி நடிகரான சத்தியன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரேயா இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது லண்டன் விமான நிலையத்தில் பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி லண்டன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் . பின்னர் நடிகர் விமல் மற்றும் பட குழுவினர் ஆகியோர் இணைந்து காவல் துறை அதிகாரிகளிடம் தாங்கள் படப்பிடிப்புக்காக தான் விமான நிலையம் வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர் . மேலும் இதனைக் கேட்ட லண்டன் போலீசார் உரிய ஆவணங்களை சரிபார்த்து நடிகை ஸ்ரேயாவை விடுவித்துள்ளனர். 

இந்த சம்பவம் சண்டக்காரி திரைப்பட குழுவினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் லண்டன் போலீசாரால் நடிகை ஸ்ரேயா கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.