பிரபல இளம் நடிகையிடம் ரூ.1 கோடியை இழந்த சீனியர் தயாரிப்பாளர்! அவரே வெளியிட்ட தகவல்!

தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷாலினி பாண்டே.


இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் 100% காதல் என்னும் திரைப்படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் டி.சிவா தயாரிப்பில் அருண் விஜய் , விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து நடிக்கும் அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். 

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு 100 நாட்களுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசி நடிகை ஷாலினி ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் முன்பணமாக 15 லட்சத்தையும் ஷாலினி பாண்டே பெற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சுமார் 27 நாட்களுக்கு ஷாலினி பாண்டே நடித்துள்ளார். 

இந்நிலையில் இந்தி சினிமாவில் ரன்பீர் கபூருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால் திடீரென்று அக்னி சிறகுகள் திரைப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார் நடிகை ஷாலினி பாண்டே . இதனால் தனக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அக்னி சிறகுகள் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா தற்போது கூறியிருக்கிறார். 

அக்னி சிறகுகள் திரைப்படத்தை விட்டு ஷாலினி பாண்டே விலகியதால் அதற்கு பதிலாக அக்ஷரா ஹாசனை வைத்து நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி உள்ளதாகவும் அவர் கூறினார். ஆகையால் நடிகை ஷாலினி பாண்டே மீது மோசடி வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகை ஷாலினி பாண்டே மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் டி.சிவா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.