பிரபல திரைப்பட நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணமாகி 2 வருடத்திற்கு பிறகு சமந்தா கர்ப்பம்? ஆனால் அதிர்ச்சியில் நயன்தாரா காதலர்! ஏன் தெரியுமா?
தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை சமந்தா ஆவார். இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தாவுக்கு சென்ற உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப் படத்தில் கமிட்டாகி இருந்தார். சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய திரைப்படத்திலிருந்து ஏன் சமந்தா விலகினார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பதிலளித்துள்ளார்.
நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளதால் இந்த திரைப்படத்தில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.