சமந்தாவை நான் முதலில் மும்பைக்கு அழைத்துச் சென்றேன்..! பாகுபலி நடிகர் வெளியிட்ட டாப் சீக்ரெட்!

தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா.


தமிழ் ,தெலுங்கு திரைப்படங்களில் தாண்டி நடிகை சமந்தா தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். இந்தி சினிமாவின் வெப்சீரிஸ் ஒன்றில் நடிகை சமந்தா பிஸியாக நடித்து வருகிறார்.

புகழ்பெற்ற இந்தி வலைத் தொடரான ​​தி ஃபேமிலி மேனின் தொடர்ச்சியில் சமந்தா அக்கினேனி முக்கிய பங்கு வகித்து வருகிறார். இந்த வலைத்தொடரில் நடிகை சமந்தா எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது ஃபேமிலி மேன் 2 -ல் , நடிகை சமந்தா பயங்கரவாதியாக நடித்து வருவதாகவும் சமீபத்திய தகவல் கூறுகிறது. நடிகை சமந்தாவிற்கான இந்த அரிய வாய்ப்பைப் பெற்றுத் தந்தது பாகுபலி புகழ் நடிகர் ராணா டகுபதி ஆகும்.

நடிகர் ராணா, சமந்தாவுக்கும் அவரது கணவர் நாகசைதன்யாவிற்கும் நெருங்கிய நண்பர் ஆவார். இவர்களது நட்பின் அடிப்படையிலேயே நடிகை சமந்தாவிற்கு இந்த அரிய வாய்ப்பை பெற்று தந்துள்ளார் ராணா என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.

இதேபோல் சமீபகாலமாகவே தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர்களுக்கும் ஹிந்தி சினிமா பிரபலங்களுக்கும் இடையில் பாலமாக நடிகர் ராணா செயல்பட்டு வருகிறார். உதரணமாக இந்தி சினிமாவின் முன்னணி இயக்குனரான கரண் ஜோகர் உடன் நடிகர் விஜய் தேவர்கொண்டா வை அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

தமிழில் பிரபல திரைப்படமான காஞ்சனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை தேவதர்ஷினி , நடிகை சமந்தா உடன் இணைந்து ஃபேமிலி மன் 2 என்ற வலைதள தொடரில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முதல் பாகம் தேசிய புலனாய்வு அமைப்பின் TASC கிளையில் ரகசியமாக பணிபுரியும் ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி மற்றும் சுந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ள 10-எபிசோட் அடங்கிய முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.