2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ந் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்! சமந்தா வெளியிட்ட தகவல்!

நடிகை சமந்தா தனக்கு எப்போது குழந்தை பிறக்கப் போகிறது என்பதை ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தின் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.


தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ஆவார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தின் மூலமாக பேசுவது தன் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அவ்வராக பேசும் பொழுது அவரிடம் கேட்கப்பட்ட பிரதானமான கேள்வியே உங்களுக்கு எப்போது குழந்தை பிறக்கும் ? என்பதுதான் காசு வாங்கினான். இந்தக் கேள்விகளால் சலித்துப்போன நடிகை சமந்தா தனக்கு எப்போது குழந்தை பிறக்கப் போகிறது என்பதை கூறியிருக்கிறார்.

வருகின்ற 2022-ம் ஆண்டு, ஆகஸ்ட் 7ந் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார். சமந்தாவின் ரசிகர்கள் சூப்பரான பதில் என்று பாராட்டி வருகின்றனர்.