நீண்ட நாட்களுக்கு பிறகு புகைப்படம் வெளியிட்ட சமந்தா! ஆனால் காட்ட வேண்டியதை...?

சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்பாக நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.


தமிழ் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் திரையுலகினரின் அணிவகுப்புடன் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். ஆனால் என்ன காரணமோ கடந்த ஒரு மாத காலமாக நடிகை சமந்தா எந்த ஒரு பதிவையும் வெளியிடாமல் இருந்து வந்தார். இது அவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதனால் அவரைப் பற்றி பலவித தகவல்களும் சமூக வலைத்தளத்தில் கசிந்த வண்ணம் இருந்தன.

அதிலும் குறிப்பாக நடிகை சமந்தாவிற்கும் அவரது கணவர் நாக சைதன்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும் ஆகையால் சமந்தா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் காத்து வாக்கல இரண்டு காதல் திரைப்படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகியதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதற்கு நடிகை சமந்தா ஒருவேளை நான் கர்ப்பமாக இருந்தால் நானே வெளிப்படையாக அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று ரசிகர்களிடம் கூறியுள்ளார். இப்படி இருக்க சமீபகாலமாகவே சமூகவலைதளத்தில் தலையை காட்டாமல் இருந்த இந்த நடிகை தற்போது மீண்டும் தன்னுடைய ரசிகர்களுடன் புதிய புகைப்படத்தை வெளியிட்டு அவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.நடிகை சமந்தா , தனது செல்ல நாய்க்குட்டி ஹாஷ் உடன் படுத்து கொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஒரு மாத காலத்திற்குப் பின்பும் நடிகை சமந்தாவின் முகத்தை பார்க்க முடியவில்லையே என்று ஏங்கிப் போய் உள்ளனர். தற்போது நடிகை சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.