வருசத்துக்கு ரூ.1 கோடி தர்றேன்..! தூது அனுப்பிய நடிகர்! நடிகை சொன்ன பதில்! என்ன தெரியுமா?

வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தருவதாக கூறி நடிகை சாய் பல்லவியை ஆடை விளம்பரத்தில் நடிக்க வருமாறு பிரபல நடிகர் ஒருவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.


கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி. கேரளாவில் பெரும் வெற்றியை அடைந்த இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களாலும் கவரப்பட்டது. 

அந்தப் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி தன்னுடைய அழகான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மாரி 2, கரு, என்ஜிகே போன்ற திரைப்படங்களிலும் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடிகை சாய் பல்லவி பிஸியாக நடித்து வருகிறார். மேலும் கிடைக்கும் எல்லா திரைப்படங்களிலும் இவர் நடிக்க விரும்பமாட்டார் .ஸதிரைப்படத்தின் கதை தனக்கு பிடித்தால் மட்டுமே படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவியை பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் ஆடை விளம்பரத்தில் நடிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக தருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் நடிகை சாய் பல்லவி விளம்பரப் படங்களில் தான் நடிக்க விரும்பவில்லை என்றும் அதற்காக எவ்வளவு பணம் கிடைத்தாலும் தனக்கு தேவையில்லை என்றும் கறாராக பேசியுள்ளார்.

நடிகை சாய்பல்லவியின் மார்க்கெட்டை பயன்படுத்தி பல விளம்பர நிறுவனங்கள் தங்களுடைய விளம்பர படங்களில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் நடிகை சாய் பல்லவி என்ன நேர்ந்தாலும் தான் விளம்பரப் படங்களில் நடிப்பதே இல்லை என்று கட்டுக்கோப்பாக வாழ்ந்து வருகிறார்.

இந்த செய்தியானது சாய்பல்லவியின் ரசிகர்களிடையே பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது மேலும் அவரை அவரது ரசிகர்கள் புகழ்ந்த வண்ணம் உள்ளனர்.