சமந்தா கணவருடன் 70 நாட்கள்! உடனே ஓகே சொன்ன சாய் பல்லவி!

மலையாளப் படத்தின் ரீமேக் ஆக தமிழில் வெளிவந்த "பிரேமம்" திரைப்பட புகழான நடிகை சாய் பல்லவி 70 நாட்களுக்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் செய்ய போவதாக வெளிவந்துள்ளது.


தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய ஹீரோக்களுள் நாக சைதன்யாவும் ஒருவர். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வெற்றியடைந்துள்ளன. இந்நிலையில் பிரபல இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நாக சைதன்யா ஹீரோவாக ஒரு திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சேகர் கம்முலா சாய் பல்லவியை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார். பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்தால் முதன்முறையாக நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் ஜோடியாக நடிப்பர். இந்த படத்தை குறுகிய காலத்திற்குள் எடுத்து முடிக்க வேண்டும் என்று இயக்குநர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

70 நாட்களுக்குள் நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி இடையேயான காட்சிகளை படம்பிடித்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதாக படக்குழுவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இது ஒரு காதல் ட்ராமா கலந்த கதையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குனர் சேகர் கம்முலாவும், கதாநாயகி சாய் பல்லவியும் இரண்டாவது முறையாக இணைந்து செயல்பட போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் சில தகவல்களே வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெறத் தொடங்கியுள்ளது.