இடுப்பழகி ரம்யாவுக்கு ஒரே நேரத்தில் டபுள் வாய்ப்பு..! எல்லாம் சூர்யா சார் தானாம்..!

நடிகை ரம்யா பாண்டியனுக்கு ஒரே நேரத்தில் 2 திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினை நடிகர் சூர்யா அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகை ரம்யா பாண்டியன் தேசிய விருதை தட்டிச் சென்ற ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இதனையடுத்து நடிகை ரம்யா தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் சாதாரணமாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களால் ஒரே இரவில் மிக பிரபலமான நடிகையாக மாறினார். அதற்குப் பின்பு இவருக்கென பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகினர்.

இதனை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இதன் மூலம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் உற்சாகமாக பதில் அளித்தார். அந்தவகையில் ரசிகர்கள் ஒரு சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலாக நடிகை ரம்யா பாண்டியன் தற்போது இரண்டு திரைப்படங்களுக்கு ஒரே நேரத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியிட்டார். 

2D புரொடக்ஷனில் ஒரு படமும், சிவி குமார் படத்தில் மற்றொரு படத்திலும் நடிகை ரம்யா பாண்டியன் கமிட்டாகி இருக்கிறாராம். திரைப்படங்களில் இவர் கமிட்டாக நடிகர் சூர்யா தான் காரணம் என கூறியிருக்கிறார். 2D புரோடக்ஷன் என்பது சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சார்பாக சில்லுக்கருப்பட்டி திரைப்படம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரம்யாவின் இந்த டபுள் டமாக்கா ஆஃபரை பற்றி அறிந்த ரசிகர்கள் ஒரேநேரத்தில் இடுப்பழகி ரம்யாவிற்கு இரண்டு பட வாய்ப்புகளா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.