ஒன்னும் பயப்படுறதுக்கு இல்ல..! புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி நாயகி சொன்ன தகவல்! ஆனால் போட்டோ தான்!

ஊரடங்கு உத்தரவால் வெளிநாட்டில் சிக்கியிருக்கும் நடிகை ராதிகா ஆப்தே, தற்போது வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தது மூலமாக மிகவும் பரிச்சயமான நடிகையாக தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

பொதுவாகவே பாலிவுட் நடிகைகள் இடம் கவர்ச்சிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நடிகை ராதிகா ஆப்தேவும் கவர்ச்சி புயலாக வலம் வருகிறார். இந்த நடிகையின் கவர்ச்சியில் ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாகத்தை கட்டுக்குள் கொண்டுவர உலகில் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே நடிகை ராதிகா ஆப்தே லண்டனுக்கு சென்றிருக்கிறார். ஆகையால் அவரால் மீண்டும் நாடு திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி வருகிறார்.

வெளிநாட்டில் ஊரடங்கு உத்தரவு காலத்தை இனிமையாக கழிக்க வரும் நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நீல நிற பிகினி உடையில் கப்பல் ஒன்றில் அமர்ந்திருக்கிறார். 

அவருக்கு அருகில் கடலில் மூழ்கி நீச்சல் அடிப்பவர்கள் பயன்படுத்தும் ஆடை மற்றும் கண்ணாடி ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதனைப் பார்க்கும் பொழுது அவர் கடலுக்குள் நீச்சலடிக்க தயாராகி இருந்ததாக தெரியவருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அவருடைய கவர்ச்சிகரமான அழகில் கிறங்கி உள்ளனர்.

இதேபோல் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதாவது அவர் வெளிநாட்டில் சிக்கி தவிப்பதை அறிந்த ரசிகர்கள் அக்கறையோடு விசாரித்ததை குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த பதிவை வெளியிட்டு இருந்தார். மேலும் வெளிநாட்டில் தான் பத்திரமாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.