நடிகையின் நாய்க்கு பிரத்யேக ஜாக்கெட்! விலையை கேட்டால் தலை சுற்றிவிடும்!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது செல்ல நாய் குட்டிக்கு 36 ஆயிரம் ரூபாய் செலவில் குளிர் தாங்கும் ஜாக்கெட் வாங்கி கொடுத்துள்ளார்


பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்க நிக் ஜோனசுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. கரீபியன் தீவுகளில் தேனிலவை கொண்டாடிய அந்த தம்பதி தற்போது அமெரிக்கா திரும்பியுள்ளது. பிரியங்கா சோப்ரா லாஸ்ஏஞ்சல்சில் உள்ளார். 

 

 

  இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் ஒரு புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அதில் பிரியங்கா சோப்ரா செல்லமாக வளர்க்கும் நாய் டயானா சோப்ரா ஒய்யாரமாக மெத்தையில் படுத்தபடி இருந்தது. குளிருக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஜாக்கெட்டை டயானா சோப்ரா அணிந்து இருந்தது.

 

சிவப்பு ,வெள்ளை, சாம்பல் என மூன்று நிறங்களில் அந்த ஜாக்கெட் வடிவமைக்கப்பட்டிருந்தது. நாயின் புகைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த புகைப்படத்திற்கு கீழே பிரியங்கா சோப்ரா இட்டிருந்த பதிவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் குளிராக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

 

   ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த நாய் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை 36 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. தனது செல்ல நாய் குளிரில் நடுங்க கூடாது என்பதற்காக பிரத்தியேகமாக அதை பிரியங்கா சோப்ரா வடிவமைக்க சொல்லி வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

   இது மட்டுமல்லாமல் தனக்கு ஒப்பனை செய்யும் பெண்ணையே பிரியங்கா சோப்ரா தனது நாய்க்கும் ஒப்பனை செய்யச்சொல்லி கட்டளையிட்டுள்ளார். கொடுத்து வைத்த நாய் தான் டயானா.