அவர் அவசரப்பட்டுவிட்டார்..! நீங்கள் நினைப்பது போல் இல்லை..! எஸ்ஜே சூர்யாவுடனான உறவு குறித்து பிரியா பவானி சங்கர் சொன்ன ரகசியம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தனக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையே உள்ள பழக்கத்தை பற்றியும் அவர்கள் இருவரையும் நெட்டிசன்கள் கிசுகிசுத்து வருவதைப் பற்றியும் வெளிப்படையாக மனம் திறந்து கூறியிருக்கிறார்.


சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தன்னுடைய அழகான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார். திரையுலகில் கால்பதித்த குறுகிய காலத்திலேயே கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து நடித்திருந்தார் . இந்த திரைப்படம் வெளியான பின்பு இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு முறை பற்றி பல கிசுகிசுக்கள் வெளியாகின. அதாவது நடிகர் எஸ்.ஜே.சூர்யா , நடிகை பிரியா பவானி சங்கரை காதலித்ததாகவும் அவரது காதலை நடிகை ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் உலா வந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா எங்களுக்குள் இம்மாதிரியான எந்த ஒரு பழக்கமும் கிடையாது என்று கூறினார் . பின்னர் நடிகை பிரியா பவானி சங்கர் இதனை குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் அமைதி காத்து இருந்தார் . தற்போது இதற்கான விளக்கத்தை அவர் கூறியிருக்கிறார்.

அதாவது நானும் எஸ்.ஜே.சூர்யாவும் நல்ல நண்பர்கள் தான் . எங்களுக்குள் நீங்கள் கூறும் படி எந்த ஒரு உறவு முறையும் கிடையாது. ஆகையால்தான் நான் இதனைப் பற்றி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆனால் அதற்கான விளக்கத்தை அவசரப்பட்டு எஸ்.ஜே.சூர்யா கூறிவிட்டார் என்று அவர் கூறினார்.