65 வயது கமலுக்கு மனைவியாகும் இளம் நடிகை பிரியா பவானி ஷங்கர்..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தகவல்!

உலகநாயகன் கமலஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் டு திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை காஜல்அகர்வால் மிகவும் வயதான தோற்றத்தை கொண்டு நடித்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் தற்போது சினிமா வட்டாரத்தில் வதந்தி ஒன்று பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது "இந்தியன் 2" திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு மனைவியாக இளம் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் பெரும்பாலான பகுதியில் 80க்கும் மேற்பட்ட வயது உடைய பெண்ணாக நடிகை பிரியா பவானி சங்கர் வலம் வரப் போவதாகவும் தகவல்கள் உலா வருகிறது. 1996 இல் வெளியான 'இந்தியன்' படத்தில் நடித்த சுகன்யாவைப் போலவே ஃப்ளாஷ்பேக் பகுதிகளிலும் மட்டுமே இளமையாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

நடிகை காஜல் அகர்வால் இந்தத் திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக கலரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் மூத்த நடிகரான டெல்லி கணேஷும் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.