நெஞ்சிருக்கும் வரை நடிகை தன் நெஞ்சில் இருப்பதை வெளிப்படையாக காட்டிய போது..! ஏன் தெரியுமா?

பிரபல நடிகை பூணம் கவூர் தனது நெஞ்சில் உள்ள டாட்டுவை காட்டி புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.


தமிழ்,தெலுங்கு ,மலையாளம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை பூனம் கவுர். இவர் தமிழ் திரையுலகில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு உன்னை போல் ஒருவன் ,வெடி போன்ற பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் தற்போது தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பிரபலங்கள் தங்களது வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதன் காரணமாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பிரபலங்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் கவுர் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைபடத்தில் நடிகை பூனம் கவுர் தனது நெஞ்சில் புதிதாக போடப்பட்டுள்ள டாட்டூவை காண்பிக்கும் விதமாக அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகையின் இந்த புகைப்படம் அல்லது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.