நடிகர் கமலின் காதலியுடன் இணைந்த சின்ன வயசு நடிகர்! யார் தெரியுமா?

நடிகை பூஜா குமார் சிபிராஜ் உடன் இணைந்து கபடதாரி திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் கபடதாரி. 'காவுல்தாரி' என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக் தான் கபடதாரி திரைப்படம் ஆகும். இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கபடதாரி என்று பெயரிட்டுள்ளார் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தப் புகைப்படத்தில் நடிகர் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்க உள்ளார். தற்போது திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க போகும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூஜாகுமார் நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம் 1, 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய திரைப்படங்களில் நடித்த பின்பு தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை பூஜா குமார் ஆவார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகை பூஜா குமார் கபடதாரி படத்தில் நடிப்பதற்காக விரைவில் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சைமன்கிங் இசையில், ராசாமதி ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கவுதமி நடிகர் கமலிடம் இருந்து பிரிந்தார்.

இதன் பிறகு நடிகர் கமலுடன் பூஜா குமார் தான் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.